தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு 31.07.2021 காலை 6 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
* தியேட்டர்கள், அனைத்து மதுக்கூடங்கள் இயங்க தடை தொடர்கிறது
* நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
திருமண நிகழ்வு
* பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை
* பள்ளி, கல்லூரிகள் செய்லபட தடை தொடருகிறது
* உயிரியல் பூங்காக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
* நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
* இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தொழில் பயிற்சி நிறுவனங்கள்.

இவை தவிர அனைத்து கடைகள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அங்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.




ليست هناك تعليقات:
إرسال تعليق
ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.