பல நாடுகளிலும் பரவியுள்ள உருமாறிய கொரோனா... இங்கிலாந்தில் புதிதாக கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனாவிலிருந்து விடுபடும் முன்பே இங்கிலாந்தில் 2020டிசம்பரில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இதனையடுத்து பல சர்வதேச நாடுகள் அந்நாட்டுடனான தங்களது விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டதாலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இங்கிலாந்தில் 2வது கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Plugin
Social Plugin