ப்ளூடூத் பயன்படுத்துவது போன்று ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சார்ஜ் செய்யப்பட வேண்டிய உங்கள் போன் இருந்தாக வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்ப வகையைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசின, ஆனால் இதுவரை எந்தவொரு நிறுவனமும் அதைச் செய்துகாட்டவில்லை. இப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சியோமி தனது ரிமோட் சார்ஜிங் வகையை அறிமுகம் செய்துள்ளது.
80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W கம்பி சார்ஜிங் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்த சியோமி நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு மிரட்டலான தொழில்நுட்பத்தைப் பார்ப்பது எதிர்கால சார்ஜிங் முறை இனி காற்றில் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்துப் பல விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எப்படி இது சாத்தியமானது? எப்படி இது செயல்படுகிறது?
இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5 வாட் மின்சக்தியை வழங்கத் தொழில்நுட்பம் வல்லது என்று கூறினார்.5-கட்ட குறுக்கீடு ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையைத் தீர்மானித்த பிறகு, ஒரு கட்ட கட்டுப்பாட்டு வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் சக்தியை அனுப்புகின்றது அவர் கூறியுள்ளார். உண்மையில் இந்த கண்டுபிடிப்பு பாராட்டிற்குரியதே.
Social Plugin
Social Plugin