Type Here to Get Search Results !

#LiveTamilTV

அதிகாரபூர்வமாக வாக்குகளை எண்ணினால், தேர்தலில் எளிதில் வென்றுவிடலாம்: டிரம்ப்

அதிகாரபூர்வமாக வாக்குகளை எண்ணினால், அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் எளிதில் வென்றுவிடலாம் என்று திரு. டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"தாமதமாகச் செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணினால், தேர்தல் முடிவுகள் நம்மிடமிருந்து பறிக்கப்படலாம்." என்று அவர் தொலைக்காட்சி உரையில் கூறினார்.

ஊடகம், தொழில்நுட்பம், பணம் ஆகியவற்றின் மூலம் தேர்தலில் தலையீடு இருந்தாலும், தாம் புளோரிடா (Florida), அயோவா (Iowa), இண்டியானா (Indiana), ஒஹாயோ (Ohio) உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றிபெற்றதாகக் கூறினார்.

இருப்பினும் திரு. டிரம்ப் பேசத் தொடங்கிய சற்று நேரத்திலேயே அமெரிக்காவின் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் சில, அவருடைய உரையின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தின.

அதிபர் டிரம்ப்பின் பொய்த் தகவலைச் சரி செய்யவேண்டியிருந்ததாகச் சில நிறுவனங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க, குறைந்தபட்சம் 270 அதிபர் மன்ற வாக்குகளை வேட்பாளர் பெறவேண்டும்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 260-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big