26 நாடுகளைச் சேர்ந்த 27 போலீஸ் குழுக்களுடன் சேர்ந்து, கோவிட் -19 தொற்றுக்கு எதிராக முன் வரிசையில் நின்று போராடி வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அமீரக உள்துறை அமைச்சகம் உலகளாவிய இசை அஞ்சலி செலுத்தியுள்ளது.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், இந்த பேரிடர் நேரத்தில் நன்றி மற்றும் நம்பிக்கையின் செய்தியாக, ஒரு இசைக்குழு குழும நிகழ்வை நடத்த பல நாடுகளை சேர்ந்த போலீஸ் இசை குழுக்கள்(police bands) ஒன்றாக இணைந்தன.
இந்த இசை அஞ்சலி நிகழ்வில் அமீரக இசைக்குழுவைத் தவிர, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், புருனே, புர்கினா பாசோ, கொலம்பியா, செக் குடியரசு, கானா, குவாத்தமாலா, லிதுவேனியா, மொரீஷியஸ், இத்தாலி, இஸ்ரேல், நியூசிலாந்து, பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், செனகல், சிங்கப்பூர், ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, தென்கொரியா, தைவான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் போலீஸ் இசை குழுக்களும் பங்கேற்றன.
தொற்று களத்தில் போராடி வரும் முன்கள ஹீரோக்களை கெளரவப்படுத்த வெற்றிகரமான அணிவகுப்பு( Triumphal March) என்றழைக்கக்கூடிய இசையை போலீஸ் இசை குழுக்கள் இசைத்தன.
இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமீரக உள்துறை அமைச்சகம், கோவிட் -19 உலகத்த்தின் இயக்கத்தை நிறுத்தியது, ஆனால் நோயை எதிர்த்து போராடி வரும் முன்னணி தொழிலாளர்களிடமிருந்து வரும் வீரியமிக்க முயற்சி, முக்கிய சேவைகளை தடையின்றி தொடர செய்கிறது. சவாலான நேரத்தில் அவர்களின் அர்ப்பணிப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த போலீஸ் இசைக்குழுக்களின் வீடியோ அமைந்துள்ளது’என குறிப்பிட்டுள்ளது.
Social Plugin
Social Plugin