முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணியினை முன்னெடுத்தனர்.
இதன் போது வன்னிவிளாங்ளும் வீதி முழுவதும் பொலிசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
காலை முதல் நண்பகல் ஒரு மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிரமதானத்தில் ஈடுபட்டாலும் சிரமதானம் முடியும் வரை வீதியில் படையினர் பொலிசார் ஒளிப்படம் எடுத்து சிரமதான பணியில் ஈடுபட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
Source:வீ.கே(VK)
Social Plugin
Social Plugin