ஒண்டாரியோவில், ஆண்டுக்கு இருமுறை நிகழும் நேரமாற்றத்தை அகற்றும் சட்டமூலம், மாகாண பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த நேர திருத்த சட்டம், ஒட்டாவா மேற்கு மாகாணசபை உறுப்பினர் ஜெரமி ரொபேர்ட்ஸால் முன்வைக்கப்பட்டிருந்தது.
நேரமாற்றங்கள் மக்களுக்கு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மன அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றை அதிகரிப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவித்து வந்தன. அத்துடன், நேரத்திருத்த சட்டம் அமுல்படுத்தப்பட்டு நேர மாற்றம் அகற்றப்பட்டால், சூரிய ஒளியுடன் கூடிய அதிக மாலை நேரம் மக்களுக்கு கிடைக்கும் என்றும், அதனால் நுகர்வுத்தன்மை மேம்படுமென்றும், மாகாணசபை உறுப்பினர் ஜெரமி ரொபேர்ட்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Social Plugin
Social Plugin