மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தயார் நிலையில் உள்ளது: யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் - உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV #sooriyantv

LiveTamil TV: உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #TamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #viralvideos, #trendingshorts, #trendingvideo, #செய்திகள் #தமிழகம் #சினிமா

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.

Top Avd

middle ad

23‏/11‏/2020

மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தயார் நிலையில் உள்ளது: யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.


தற்போது தாழமுக்கம் காரணமாக விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல் ஒன்று கிடைத்திருக்கின்றது. நேற்று தொடக்கம் 24, 25 ஆம் திகதி வரை அவதானமாக மீனவர்களை கடலுக்குச் செல்லும் படியும் அதே நேரத்தில் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறகூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி 24, 25 ஆம் திகதிகளில் 100-150 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும், கடும் காற்று வீசும் எனவும் 24, 25 ம் திகதி வடக்கு மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம். அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டலத் திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய கடற்தொழில் செயற்பாடுகளை செயற்படுத்தப்படுத்தல் வேண்டும்.

கடல் குழப்பமாக இருப்பதனால் குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம், கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், படகுப் போக்குவரத்தினை, நிலமையினை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 

மேலும், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பாடசாலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் வகுப்பறையில் மாணவர்கள் பேண வேண்டிய சுகாதார நடைமுறை விடயங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் விரிவான நடைமுறை வழிகாட்டல்கள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 அதன்படி வகுப்பறையில் மாணவர்களை 50 சதவீதமான அளவுக்கு அனுமதித்து பாடசாலை கல்வியை தொடரமுடியும். அதேபோல மாணவர்களுடைய போக்குவரத்து மற்றும் இதர விடயங்களில் அவதானமாக இருக்கும் படியும் அவர் கோரியுள்ளார். எனவே அதனைப் பின்பற்றி பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடரமுடியும். அதேபோல் இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்கள் வழமைபோல் இடம்பெறுகின்றது. மக்கள் அவசியமற்ற பயணங்களை தவிர்த்துகொள்ள வேண்டும். சுகாதார நடைமுறைகளையும் சமூக இடைவெளி, முககவசம் போன்றவற்றையும் கவனத்தில் எடுத்தல் அவசியமாகும்.

யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பு பொதுமக்களின் கைகளில்தான் இருக்கின்றது. சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என சோதிக்க மட்டுமே முடியும் எனவே பொதுமக்கள் இந்த விடயங்களை கருத்தில் எடுத்து செயற்பட வேண்டும். 

எனவே இனி மழைகாலம் ஆரம்பித்துள்ளதால், நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி மற்றும் பொதுமக்கள் நுளம்பு பரவல் ஏற்படாவண்ணம் தங்களையும் சூழலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.

கனடா

5/col-left/Canada
4/feat-big/

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Avd

Alert Messages

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.
Your Ad Spot