Type Here to Get Search Results !

#LiveTamilTV

கொழும்பு வாழ் மக்களுக்கு இன்று முதல் உதவித்தொகை!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்களுக்கான நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட தபால் அலுவலகங்களில் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நிவாரண உதவித் தொகை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிவாரண உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்காக 13,000 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள திகதியின் அடிப்படையில் இந்த உதவித் தொகையை பெற்றுக் கொள்வதற்காக சமூகமளிக்குமாறு கொழும்பு மாநகர ஆணையாளர் கூறியுள்ளார்.

மக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்தில் கொண்டே வெவ்வேறு தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார் அந்தந்த பகுதிகளுக்கு சமூகமளித்து கொடுப்பனவு வழங்கப்படும் தினத்தை அறிவிப்பர் எனவும் அதனடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று கொடுப்பனவை பெற்றுக் கொள்ளுமாறும் கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big