Type Here to Get Search Results !

#LiveTamilTV

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் நாடளாவிய முடக்கம்- இங்கிலாந்தில்!

இங்கிலாந்தில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐரோப்பியாவில் மீண்டும் எழுந்துள்ள கொரோனா அலையினை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகள் ஏற்கனவே முடக்கம் அறிவித்துள்ள நிலையில் இங்கிலாந்திலும் குறித்த நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இன்று நாளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள குறித்த முடக்கத்தின் அடிப்படையில் அந்நாட்டின் மதுபானசாலைகள், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களாகியன எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே வகையான நடவடிக்கைகள் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்திலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இத்தாலியின் பல பிராந்தியங்கள் சிவப்பு அபாய வலையங்களாக அறிவிக்கப்படவுள்ளன.

குறித்த சூழ்நிலை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) நாடாளமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கொரோனா வைரஸின் முதல் அலையினைக் காட்டிலும் இரண்டாவது அலையில் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். மேலும், தனது நட்பு நாடுகளின் கொரோனா பரவல் நிலைகளை அவதானித்த வகையில், கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் பிரித்தானிய மக்களின் வாழ்க்கையினை பணயம் வைக்க தான் ஒருபோதும் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவில், 25 ஆயிரத்து 177 புதிய தோற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். மேலும் குறித்த வைரஸ் தொற்றின் காரணமாக அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 492 மரணங்கள் பதிவாகியிருந்த அதேவேளை 12 ஆயிரத்து 320 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big