மரணப் பிடியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் காப்பாற்றப்படவேண்டும்: குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு! - உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV #sooriyantv

LiveTamil TV: உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #TamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #viralvideos, #trendingshorts, #trendingvideo, #செய்திகள் #தமிழகம் #சினிமா

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.

Top Avd

middle ad

18‏/11‏/2020

மரணப் பிடியிலிருந்து தமிழ் அரசியல் கைதிகள் காப்பாற்றப்படவேண்டும்: குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் கொரோனா மரணமும் அதிகரித்து வருகின்றன.அத்தோடு சிறையில் இருக்கும் கைதிகளுக்கே கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகின்றது. எனவே கைதிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் உண்டா என்ற கேள்வி எழுகின்றது.ஆகையால் இதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு இன்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் பின்வருமாறு….

தற்போது கொழும்பில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வெலிக்கடை , போகம்பரை, கொழும்பு விளக்கமறியல் சிறை,
பூசா ,மகசின், குருவிட்ட போன்ற சிறைச்சாலைகளில் பரவ ஆரம்பித்துள்ளது.

எனினும் இந்த சிறைக்கைதிகளின் விடயத்தில் அரசாங்கமும் அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இன்றுவரை சிறைச்சாலைகளில் 500 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை இன்னும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையே காணப்படுகிறது. ஆரம்பத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்ட
போது சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரைவாசியைக் கூட அங்கு நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை.

கைதிகளைப் பார்வையிடுதல் நீதிமன்ற நடவடிக்கைகள் என்பன இடைநிறுத்தப்பட்ட பின்பும் இந்த வைரஸ் தொற்று சிறைக்குள் நுழைந்தது என்றால் இதற்கு யார் பொறுப்பாளி என்பதை
எவராலும் தேடிப் பார்க்க முடியவில்லை. மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட வர் என தினமும் கைது செய்யப்படுவோர் சிறைத் துறையின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இலங்கையில் 12ஆயிரம் கைதிகளை மட்டுமே தடுக்கக்கூடிய சிறைச்சாலைகளில் 37000 த்துக்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இங்கு எப்படி சமூக இடைவெளி இருக்கப்போகின்றது. இவர்களை பாதுகாப்புடன் எப்படி பராமரிக்க முடியும்? தற்போது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் சுமார் 15-25வருடங்களுக்கு மேலாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீரிழிவு, மன உளைச்சல், சுவாசக்கோளாறு போன்ற பல தீராத வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தமிழ் அரசியல்கைதிகள் இன்னொருபுறம் மிக மோசமான உடல் உளப் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு போதிய மருத்துவமோ போசாக்கான உணவோ கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவுள்ளது.

இவர்களுக்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து காலதாமதப்பட்டு வருகின்றது. இதனாலும் இவர்கள் உடல் உள ரீதியில் இன்னும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்
அரசியல் கைதிகளில் 10 க்கும் மேற்பட்டோர் சிறைச்சாலைக்குள்ளேயே உயிரிழந்துள்ளனர்.

சம காலத்தில் தமிழ் அரசியல்கைதிகளை பழிவாங்குவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலைகள் கொரோனா மூலமும் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.தற்போது கொழும்பு மாநகர எல்லைக்குள் கொரோனா தாக்கமும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ள புதிய மகசின் சிறைச்சாலையின் அமைவிடமான பொரளை பிரதேசம் தொற்று அபாய வலயமாக மாறியுள்ளது. இதனால் சிறைச்சாலை மீது சிறப்பு அவதானம் வேண்டும்.

சிறைச்சாலையில் நோய் கொத்தணி தோற்றம் பெற்று தொற்று நோய் இன்னும் அதிகரித்து வருவதும் தவிர்க்க முடியாது என சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.இதுவரை நோய்த்தொற்று பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாம் தற்போது மரணம் பற்றி பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்தநிலையினைத் தொடர்ந்து நாம் நான்காவது அலையினை சந்திக்க நேரிடும் எனவும் சுகாதாரப்பிரிவினர் எச்சரிக்கை செய்கின்றனர்.

தொடர்ந்து வரும் பேரழிவு இன்னும் பாரதூரமாக இருக்கும் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது சுகாதார அமைச்சினால் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக இது இலங்கை நாட்டு மக்களுக்காக இருப்பினும் சிறைக்கைதிகளுக்கு இந்த வழிமுறைகள் எந்தளவு பொருத்தமாக அமையும் என்பது
சந்தேகமே.

குறிப்பாக சிறைச்சாலையைப் பொருத்தமட்டில் எவ்வித சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றக் கூடியதாக இல்லை. சிறைச்சாலைகளில் சமூக இடைவெளி தொற்று நீக்கல் பரிந்துரைக்கப்பட்ட முகக்கவசம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய செயற்றிட்டம் என எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு மேற்கொள்ளப்படுவதாக இல்லை.

இவ்வாறு இருக்கும்போது சிறைக்கொத்தணி ஏற்படுவதைத் தடுத்து சிறைகைதிகளை வைரஸ் தொற்றிலிருந்து எப்படிக் காப்பாற்ற முடியும்.இதற்கான பொருத்தமான நடவடிக்கைகள்
பின்பற்றப்படுகின்றனவா இவை எதுவும் இங்கு இல்லவே இல்லை.

பொதுவாக சிறைக்கைதிகளில் இருந்து தமிழ் அரசியல்கைதிகளை வேறுபடுத்தி வித்தியாசப்படுத்தி சிந்திக்க வேண்டிய அவசியப்பாடு உள்ளது. ஏனெனில் தமிழ் கைதிகள் உடல் உள ரீதியாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமை மட்டுமல்ல பல்வேறு நோய்களுடனும் நெருக்கடிகளுடனும் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்கள்.

இதனால் தமிழ் கைதிகள் இலகுவில் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டு தங்கள் உயிர்களை இழக்க நேரிடும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.இதற்கான சாதகமான நிலைமைகளே உள்ளது.



ليست هناك تعليقات:

إرسال تعليق

ملحوظة: يمكن لأعضاء المدونة فقط إرسال تعليق.

கனடா

5/col-left/Canada
4/feat-big/

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Avd

Alert Messages

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.
Your Ad Spot