Type Here to Get Search Results !

#LiveTamilTV

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு: அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பிறகு அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.

ஒப்புதல்
 
ஒப்புதல்

இதையடுத்து, ஆளுநர் வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்திருந்தனர். அதேபோல, காலம் தாழ்த்தி வருவதால் ஆளுநரை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

 உள் ஒதுக்கீடு

உள் ஒதுக்கீடு

ஆனால் ஆளுநர் தரப்போ, "7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருவதாகவும், அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும்" என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 ஒப்புதல்

ஒப்புதல்

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆர்டிகிள் 162ஐ பயன்படுத்தி, கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 கலந்தாய்வு

கலந்தாய்வு

கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது… எனினும், இந்த அதிரடி நடவடிக்கையால், தமிழ அரசு, நீதித்துறை, மாநில கவர்னர் ஆகிய 3 துறைகளுக்கு இடையே அரசியலமைப்பு ரீதியிலான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big