Type Here to Get Search Results !

#LiveTamilTV

மன்னிப்பு கேட்ட குழந்தைகளுக்கான பாடல்களை வெளியிடும் ஆஸ்திரேலிய இசைக்குழு!

அப்பளத்தைப் பற்றிய பாடல் ஒன்றை போதிய விவரங்களின்றி வெளியிட்டதற்குக் குழந்தைகளுக்கான பாடல்களை வெளியிடும் ஆஸ்திரேலிய இசைக்குழு The Wiggles மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

2014இல் வெளியிடப்பட்ட அந்தப் பாடல் காணொளியில் பாரம்பரிய இந்திய ஆடைகளில் இடம்பெறும் பாடகர்கள், கைகளில் அப்பளத்தைப் பிடித்துக்கொண்டு, 'பப்படம்' என்ற சொல்லை மட்டும் கொண்டு பாடலைப் பாடினர்.


காணொளியில் சிரித்துக்கொண்டு இடம்பெற்ற இந்தியப் பெண்ணும் ரசிகர்களின் சினத்துக்கு ஆளாகியிருக்கிறார்.

அப்பளம் உலக அளவில் இந்தியர்களிடையே பிரபலமான நொறுக்குத் தீனி.

அப்பளங்களைப் பற்றிய எந்த விதமான தகவலையும் வழங்காமல், கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் பாடல் அமைந்ததாக டுவிட்டரில் பலர் பதிவிட்டனர்.

கொண்டாட்ட உணர்வை உருவாக்கும் நோக்கில் பாடல் இயற்றப்பட்டதாய் கூறினார் இசைக்குழுவின் தோற்றிவிப்பாளர்.

இந்தியச் சமூகத்தினரை அவமதிக்கும் எண்ணத்தில் பாடல் உருவாக்கப்படவில்லை என்று கூறிய அவர் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

காணொளியில் மற்றவர்கள் பாடும்போது இந்தியப் பெண் அசௌகர்யமாகச் சிரிப்பதைப் போல இருப்பதாகச் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

பிள்ளைகளுக்கான காணொளியில் ஆழமான கருத்து இருக்கவேண்டும்; பாடலில் முறையாக அதை எடுத்துக்கூற இந்தியர்களும் இல்லை, அப்பளத்தின் சிறப்புகளும் இல்லை என்று இணையவாசிகள் குறைகூறினர்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big