உங்க குரலை கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும்னு. மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார்' என்று பாடகர் எஸ்.பி.பி. நலம் பெற பிரார்த்தனை செய்வதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
'எஸ்.பி.பி சார், விவரம் தெரிஞ்சு, உங்க குரல் கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்ல. விடியக்கால நடந்தாலும் சரி, வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கிறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்.
எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாட வேண்டும். உங்க குரலை கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்கை ஓடணும்னு. ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன் சார்' என அதில் கூறியுள்ளார் .
Social Plugin
Social Plugin