இணையத்துடன் இணைந்திருக்கும் முகக் கவசத்தை ஜப்பான் ஸ்டார்ட்அப் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த டோனட் ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனம் புதுமையான முகக் கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இன்டர்நெட் உடன் இணைந்திருக்கும் வகையில் இந்த முகக் கவசம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சி-மாஸ்க் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட் ஃபேஸ் மாஸ்க் மூலம் மெசேஜ் அனுப்பலாம், ஜப்பானிய மொழியிலிருந்து எட்டு மொழிகளில் மொழிபெயர்க்கலாம், மேலும் வொய்ஸ்கால் கூட செய்யலாம். வெள்ளை நிறத்தில் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த முகக் கவசம் ப்ளூடூத் மூலமாக இயங்குகிறது.
அதனால் ப்ளூடூத் உதவியுடன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுடன் ஒரு ஆப் வாயிலாக இணைக்க முடியும். சாதாரண முகக் கவசம் மீதே இதனை அணிந்து கொள்ள முடியும். அதேபோல இந்த சி-மாஸ்க்கை அணிந்திருப்பவரின் குரலை இது வெளிப்படுத்தும்.
ஒரு சி-மாஸ்க்கின் விலை 40 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் ஜப்பானுக்கு முதலில் 5,000 யூனிட்களை அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த முகக் கவசங்களை சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் விற்க டோனட் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Social Plugin
Social Plugin