பல இடங்களில் தோற்றத்தால் தான் நிராகரிக்கப்பட்டதாக தீனா.
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தீனா. இந்த நிகழ்ச்சியின் சீசன் 5-யில் தீனாவின் டைம்மிங் சென்ஸ்காகவே அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது.
அதன் பின்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘எங்கிட்ட மோதாதே’ என்ற ரியாலிட்டி கேம் ஷோவை தொகுப்பாளினி திவ்யதர்ஷினியுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அந்த கேம் ஷோவும் வழக்கம் போல் ஹிட் அடித்தது.
பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அனைத்து நிகழ்ச்சியிலும் தீனா ஃபோன் கால் போட்டு பாரபட்சமே இல்லாமல் அனைவரையும் கலாய்ப்பார். டிடி தொடங்கி, சித்ரா, கோபிநாத், ரோபோ சங்கர், நடிகர்கள் கார்த்திக், சிவகார்த்திகேயன் என இவரின் ஃபோன் கால் பன்ச்களை எல்லாருமே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கைத்தட்டி ரசிக்க தொடங்கினர்.
பின்பு தீனாவின் வாழ்க்கை அப்படியே மாறியது. வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்தது. ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தீனா கோலிவுட்டில் காலெடி எடுத்து வைத்தார். இதையடுத்து, கைதி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, பெரும் பாராட்டையும் பெற்றார். தற்போது, மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த குறுகிய காலத்தின் தீனாவின் இந்த அசுர வளர்ச்சியை கண்டு பொறாமை படாதவர்களே இல்லை எனலாம். ஆனால் இவை அனைத்துமே அவரின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம். பல இடங்களில் தோற்றத்தால் தான் நிராகரிக்கப்பட்டதாக தீனா வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். பால் வழியும் கிராமத்து முகம் தான் தீனாவின் மிகப் பெரிய ப்ளஸ்.
சமீபத்தில் , லாக்-டவுனால் வீட்டில் இருந்த தீனா, வீட்டில் இருக்கும் மாடுகளிடம் இருந்து பாலை கறந்து வீடியோ இணையத்தில் வைரலானது.
Social Plugin
Social Plugin