Type Here to Get Search Results !

#LiveTamilTV

107 பேருடன் வந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது!

பாகிஸ்தானில் 107 பேருடன் வந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது; மீட்பு பணியில் சிக்கல்

Updated in 2020-May-22( 8 மணி நேரங்களுக்கு முன்னர்)

54 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் விமான விபத்து.. பாகிஸ்தானில், கராச்சி விமான நிலையத்துக்கு அருகே பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.
இதுவரை நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாகூரில் இருந்து கராச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான விபத்து நிகழ்ந்த பகுதி அதிக மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாகும். இதனால், மீட்புப் பணிகளில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கராச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் 99 பயணிகள் உட்பட 107 பேர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும் விரைவாக தரையிறங்க வேண்டும் என்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விமானி, விமான நிலையத்தை சுற்றி வந்து தரையிறங்க முயற்சித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுவரை விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து நான்கு உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், விமானம் விழுந்ததால் காயமடைந்த குடியிருப்பு வாசிகளும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big