திரைப்படங்களில் நடிப்பவர்கள் வெப் தொடர்களில் நடிக்கக் கூடாது.. தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை! The Tamil Film Producers Council has Warned that Actors Acting in Films Should not act in web series

தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை: நடைபெற்ற இந்த கூட்டத்தில், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர், தயாரிப்​பாளர்​கள் சங்க செய​லா​ளர்​கள் எஸ்​.க​திரேசன், ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், துணைத்​ தலைவர் கமலக்​ கண்​ணன், இணைச்​செய​லா​ளர் சுஜாதா விஜயக்​கு​மார், பொருளாளர் ​சு​பாஷ் சந்​திர போஸ், முன்​னாள் தலை​வர் கேயார், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்​கத் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்​குமரன், செயலாளர் டி.சி​வா, பொருளாளர் தனஞ்​செயன், தயாரிப்பாளர்கள் ஆர்​.பி.சவுத்​ரி, ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.
Producers Council

இதைத்தொடர்ந்து இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழ்குமரன், காலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டார்கள். தமிழ் சினிமா எதை நோக்கி செல்ல வேண்டும் என வழிகாட்டுதல் நெறிமுறைகள் எல்லாம் அமைத்து இருக்கிறோம். அதே போல, சின்ன பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசி இருக்கிறோம். இதனால், அடுத்த மூன்று ஆண்டில் நிச்சயமாக தமிழ் சினிமாவிற்கு நல்லது நடக்கும் என்றார்.

தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர்​கள் சங்​கத் தலை​வர் ஜி.கே.எம்.தமிழ்​குமரன் தலை​மை​யில், தயாரிப்​பாளர்​கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமை​யாளர்​கள் சங்​கத்​தினர் இணைந்த கலந்​தாய்வு கூட்​டம் சென்​னை​யில் நடைபெற்றது. அதிரடியான பல முக்கிய முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.

தயாரிப்பாளர் சங்க கூட்டம்: கடந்த டிசம்பர் மாதம் நடந்த தயாரிப்​பாளர்​கள் சங்கத் தேர்தலில் ஜி.கே.எம்.தமிழ்​குமரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர், நடிகையர், இயக்​குநர், முன்​னணி தொழில்​நுட்ப கலைஞர்கள் என யாராக இருந்தாலும், யார் முதலில் தயாரிப்​பாளரிடம் அட்​வான்ஸ் வாங்குகிறார்களோ அவருக்கு முன்​னுரிமை கொடுத்து ​படத்தை முடித்துத் தர வேண்​டும். ​படங்​களில் நடிக்​கும் முன்​னணி நடிகர், நடிகையர், இயக்​குநர், தொழில்நுட்ப கலைஞர்கள், வெப் தொடர்​களில் நடிக்​கவோ, இயக்​கவோ கூடாது, அவ்​வாறு செல்​லும் நடிகர், நடிகையர், முன்​னணி தொழில்​நுட்ப கலைஞர்​கள் திரைப்படங்​களில் பணிபுரிய கூட்​டுக்​குழு எடுக்​கும் முடிவுக்கு கட்​டுப்பட வேண்​டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Producers Council.TN

Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>