வாரத்தில் 3 நாட்களுக்கு பயணிகள் கப்பல் சேவை - நாகப்பட்டினம் – காங்கேசன்துறை!!

நாகப்பட்டினம்  காங்கேசன்துறைக்கிடையிலான  பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிக்கும் அடிப்படையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Picture: From Searched in Website)


Post a Comment

Previous Post Next Post