தமது எதிர்காலம் குறித்து மிகுந்த அச்சமடைந்துள்ள இளம் தலைமுறையினை இலக்கு வைத்து இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே கனடாவின் வீட்டு நெருக்கடிக்கான பல்வேறு முன்மொழிவுகளை இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டுள்ளது.
|
(Creator: Justin Tang | Credit: AP) |
2031ம் ஆண்டுக்கும் 3.9 மில்லியன் வீடுகளை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
ஆனாலும் அதற்கான சாத்தியங்கள் மற்றும் உபாயங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
வீட்டு நெருக்கடிக்கான தீர்வுகளாக பல்வேறு விடயங்களை இந்த வரவு செலவுத் திட்டம் கொண்டுள்ளது.
முதல் முறையாக வீடொன்றை கொள்வனவு செய்பவர்கள் காப்புறுதி செய்யப்பட்ட அடமானக்; கடன்களை 30 வருடகாலத்தில் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கு.
பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்திலிருந்து (RRSP) 60,000 டொலர்களை தமது வீட்டுக் கொள்வனவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு. முன்னதா இந்த தொகை 35,000 டொலர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை திருப்பிச் செலுத்த ஆரம்பிப்பதற்கான கால எல்லை ஐந்து ஆண்டுகாக நீடிக்கப்பட்டுள்ளது.
வாடகைக் குடியிருப்பாளர்களின் உரிமைகளுக்கான சிறப்பு சாசனம் ( Canadian Renters’ Bill of Rights )குறித்த முன்மொழிவு வாடகை குடியிருப்பாளர்களுக்கு மேலாதிகமான சலுகைகளை வழங்குகின்றது.
அவர்களின் வாடகைக் கொடுப்பனவு அவர்களின் கடன் பெறு தகுதி நிலை புள்ளிகளை (Credit Score) )கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வீட்டுக் கட்டுடமான தொழில் துறை மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களுக்கும் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை தாண்டி அரசாங்கம் முன்னெடுப்பதற்கு உறுதியளித்துள்ள ஒரு விடயம் தான் எதிர்கால வீட்டுக் கொள்வனவாளர்களுக்கு மிகப் பெரிய சாவலாக மாறும் என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீட்டுக் கொள்வனவில் ஈடுபடுகின்றவர்கள் தமது அடமான கடன் பெறும் எல்லையினை தீர்மானிக்கும் வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு இதுவரை வங்கிகளுக்கு ஆவணங்கள் மட்டுமே வழங்கப்பட்ட வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.
ஆனால் இனி வரும் காலங்களில் உண்மையான வருமானத்தை உறுதிப்படுத்துவதற்கு கனேடிய வருமான வரி முகமை ( CRA ) அடமான்க கடன் வழங்கும் நிறுவனங்கள் நேரடியான தொடர்பினை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் அடமானக் கடன் மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும் தமது பொருளாதார இயலுமைகளை தாண்டி மக்கள் அதிக விலைக்கு வீடுகளை கொன்வனவு செய்து அதன் மூலம் சந்திக்கும் பல்வேறு சவால்களையும் அவலங்களையும் கட்டுபபடுத்தலாம் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அடமானக் கடன் பெறுவதில் கொண்டு வரப்படும் இந்த புதிய ஏற்பாடுகளால் வீட்டுச் சந்தையில் கணிசமான மாற்றம் எற்படும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
தமது பொருளாதார தகுதி நிலைக்கு மீறி எவரும் வீட்டுக் கொள்வனவுகளில் ஈடுபட முன்வர மாட்டார்கள் என்பதால் வீடுகளுக்கான போட்டி நிலை வீழ்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எப்பபோது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கால எல்லை அறிவிக்கப்படாத போதிலும் அரசாங்கம் இது குறித்து நீண்டகாலமாக ஆலோசித்து வருவதான தகவலும் தற்போது வரவு செலவுத் திட்டத்தில் இது குறித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதும் விரைவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது.
அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விட்டிருக்கின்றது.
நன்றி: ரமணன்.S
Post a Comment
0 Comments