யாழ் பல்கலைகழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு!!

யாழ் பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அகற்றுமாறு கோரி முறைப்பாடொன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உட்பட இரு இளைஞர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை ஆரம்பித்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, தூபியை அமைக்க பெறப்பட்ட மற்றும் செலவழிக்கப்பட்ட நிதி விபரங்கள், தூபியை அமைக்க பெறப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணங்களுடன் நாளை மறுதினம் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி இரவு இடித்து அழிக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டங்களையடுத்து மீண்டும் 2020.10ஆம் திகதி துணைவேந்தர் சிறிசற்குணராஜாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு புதிய தூபி நிர்மாணிக்கப்பட்டது.

அதனைதொடர்ந்து வருடந்தோறும், “மே 18 ” முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் குறித்த தூபியிலையே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Post a Comment

Previous Post Next Post