பாரதத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் !


துறவிகளையும், செங்கோலையும் தரையில் விழுந்து வணங்கிய பின், பிரதமர் மோடி செங்கோல் தாங்கி புதிய பாரளுமன்றக் கட்டிடத்துள் பிரவேசித்து, செங்கோலினை மையப்பகுதியில், தமிழ்மறை ஓதிட, நிறுவினார்கள்.

இன்று ஞாயிற்றுக்கிழமை(28) இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடமான, சன்சத் பவனினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்ட ஆதீனங்கள், துறவிகள் ஆசி வழங்க, திருவாடுதுறை ஆதீனம் கையளித்த செங்கோலினை புதிய பாராளுமுன்றத்தில் நிறுவி, தீபமேற்றி, பதிவுக் கல்வெட்டினையும் பிரதமர் மோடி திரைநீக்கம் செய்து வைத்தார்கள்.

இதன்போது, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுமம் உடன் இருந்தார்கள். இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாஜக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த திறப்பு விழாவினை எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து புறக்கணிப்பும் செய்திருந்தார்கள்.


புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் நிறைவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களின் சிலருக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தி நினைவு பரிசில்களையும் வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

 

Post a Comment

Previous Post Next Post