ஆண், பெண் உடலுறவில் ஈடுபடும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணின் அனுமதியை மீறி ஆணுறையை பயன்படுத்தாமல் இருப்பது குற்றம் என்று கனடா சுப்ரீம்கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.
கனடாவில் ஒரு ஆணும், பெண்ணும் நட்பாக இருந்துள்ளனர்.. இவர்கள் ஆன்லைன் மூலமாக கடந்த 2017ல் பழக தொடங்கி உள்ளனர்..
பிறகு நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.. நட்பு மலர்ந்துள்ளது.. ஒருகட்டத்தில், நாம் இருவரும் உடல் உறவில் ஈடுபடலாமா என்று ஆண் கேட்டுள்ளார்.. அதற்கு அந்த பெண், "ஆணுறை அணிந்து கொண்டால் அதற்கு சம்மதம்" என்று சொல்லி உள்ளார்..
நிபர்ந்தனை
இந்த நிபர்ந்தனையை கேட்டதும், முதலில் அதற்கு சரி என்று ஆண் சொல்லியுள்ளார்.. பெண்ணிடம் சொல்லியபடியே, ஆணுறை அணிந்து உடலுறவிலும் ஈடுபட்டுள்ளார்... ஆனால், அன்றைய தினமே, 2ம் முறையாக உறவில் ஈடுபட்டபோது, அந்த ஆண் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை அணியாமல் உறவு கொண்டுவிட்டாராம்.. சிறிது நேரத்திற்கு பிறகுதான், அந்த பெண் இதை உணர்ந்து அதிர்ந்துள்ளார்.. பிறகு, அந்த நண்பரிடம் சண்டைக்கு போயுள்ளார்.. வாக்குவாதம் வெடித்துள்ளது.
உடலுறவு
ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த பெண், கோர்ட்டுக்கே போய்விட்டார்.. அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்... ஆனால், அந்த நாட்டின் விசாரணை நீதிமன்றம், பெண்ணின் புகாரை டிஸ்மிஸ் செய்துவிட்டது.. இதற்கு காரணம், அந்த பெண்ணின் விருப்பம் மற்றும் சம்மதத்துடன் தான் உடல் உறவில் ஈடுபட்டேன் என்று சம்பந்தப்பட்ட ஆண், கோர்ட்டில் வாதம் செய்தார்.. அந்த வாதத்தை ஏற்று, நீதிமன்றம் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது.
Post a Comment
0 Comments