ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ரோலில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தற்போது அவருக்கு மற்றொரு சர்வதேச அளவிலான கெளரவம் கிடைத்துள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சர்வதேச அளவில் கவனிக்கப்படும் நடிகராகி விட்டார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் கேப்டன் கோபிநாத்தின் பயோபிக்காக எடுக்கப்பட்ட சூரரைப் போற்று படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது.
அதைத் தொடர்ந்து சூர்யா நடித்த ஜெய்பீம் படமும் அனைவரின் பாராட்டையும் பெற்று, சர்வதேச கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உறுப்பினராக அழைத்த ஆஸ்கர் அகாடமி
இந்நிலையில் சூர்யாவிற்கு மற்றொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர வருமாறு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், டைரக்டர்கள் என மொத்தம் 397 கலைஞர்களுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியா சார்பில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோலின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
முதல் தமிழ் நடிகர் சூர்யா
சூர்யாவிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கிடைத்த பெருமையாக இது பார்க்கப்படுகிறது. ஆஸ்கர் அகாடமியின் Motion picture arts and sciences குழுவில் உறுப்பினராக சேர வருவதற்காக தான் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக இணைய உள்ள முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை இதன் மூலம் சூர்யா பெற போகிறார்.
சூர்யாவுடன் கஜோலுக்கும் அழைப்பு
இதே போல் நடிகை கஜோல் My name is Khan, Kabhi Khushi Kabhi Gham போன்ற படங்களின் மூலம் உலக ரசிகர்களை கவர்ந்தவர். இந்த சமயத்தில் ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளவர்களின் பட்டியலில் கஜோல் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இது பாலிவுட்டிற்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.
ஆஸ்கருக்கு சென்ற சூர்யா படங்கள்
சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் 2020 ம் ஆண்டு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் விருது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் கிடைக்காமல் போனது. இதே போல் கடந்த ஆண்டு சூர்யாவின் ஜெய்பீம் படமும் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஜெய்பீமிற்கு விருது கிடைக்கும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த படத்திற்கும் கிடைக்கவில்லை.
கொண்டாடும் ரசிகர்கள்
ஆனால் சூரரைப் போற்று படம் இதுவரை 35 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அக்ஷய்குமார் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பதுடன், இந்த படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலிலும் நடிக்க உள்ளார். இந்த சமயத்தில் சூர்யாவிற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால் ரசிகர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் உள்ளனர். இதனை கொண்டாடி வருகின்றனர்.
தினம் ஒரு பெருமை
விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல் ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த போட்டோக்களை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த ஒரு போஸ்ட் மட்டும் 2 மில்லியன் லைக்குகளை பெற்றது. தென்னிந்திய நடிகர் ஒருவரின் சோஷியல் மீடியா போஸ்டுக்கு இவ்வளவு லைக்குகள் கிடைத்திருப்பது சூர்யாவிற்கு தான். இதனால் இவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 4.7 மில்லியனாக அதிகரித்துள்ளது.
Post a Comment
0 Comments