ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதாக கூறப்படும் புகாரை ரஷ்ய அதிபர் புதின் மறுத்துள்ளார்.
உலகளாவிய உணவு சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேற்குல நாடுகள் தான் காரணம்! – ரஷ்ய அதிபர் பகீர் குற்றச்சாட்டு!
Sunday, June 05, 2022
0
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் 100 நாட்களை தாண்டியும் தொடர்ந்து இந்த போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து சமையல் எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதி என வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக அளவில் சில சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களின் தேவை அதிகமாக இருந்தாலும், ஏற்றுமதி குறைவாக உள்ளதால் விலை வேகமாக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் நெருக்கடி ஏற்பட்டதற்கு ரஷ்யாவே காரணம் என ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக பேசி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “உலகளாவிய உணவு சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும், அது சார்ந்த பிரச்சினைகளையும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவின் மீது திருப்பி விடுகின்றன. ரஷ்யா மீது அவர்கள் விதித்துள்ள பொருளாதார தடைகள்தான் உலக சந்தையை மோசமாக்கியுள்ளது.
உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுக்கவில்லை. உக்ரைனிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்கும் என ரஷ்யா உறுதி அளிக்கிறது” என பேசியுள்ளார்.
Post a Comment
0 Comments