Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட 23 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

      புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்ட நிலையில் கைதான 23 இலங்கையர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

      நாடு கடத்தப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.50 அளவில் நாட்டை வந்தடைந்தனர்.

      நீர்கொழும்பு, கொஸ்வாடிய மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே நாட்டை வந்தடைந்தனர்.

      அவர்கள் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வென்னப்புவ - கொஜ்வாடிய பகுதியில் இருந்து பலநாள் படகில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டனர்.

      இந்தநிலையில், அவர்களை அவுஸ்திரேலிய கடலோர காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


      சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அவுஸ்திரேலியா ஒருபோதும் இடமளிக்காது!

      இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்துள்ளார்.(20-06-2022)

      இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர், இன்று (20) முற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார்.

      சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆட்கடத்தலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பது அவுஸ்திரேலியாவின் முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது. தற்போதைய புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொள்கையும் அதுவேயாகும் என்றும் அவர் கூறினார்.

      இதேவேளை, தாம் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் சட்டவிரோத குடிபெயர்வுகளை தடுப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படையினர் அந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

      கடற்படை, தொழில்நுட்பம் மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கும் ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி, இரு நாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

      இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலியா அவதானம் செலுத்துகிறது. இந்து சமுத்திரத்தை பாதுகாப்பு வலயமாக பேணுவதற்கு தமது அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

      சுமார் 50 கடற்படை வீரர்கள் தற்போது அவுஸ்திரேலியாவில் சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

      இத்தகைய பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இலங்கை பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் அளித்து வரும் ஒத்துழைப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டியுள்ளார்.

      சுங்க நிர்வாகத்தில் அனுபவத்தை வழங்குவதன் மூலம் அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்யவும் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீல் கூறினார்.

      கடற்றொழில் ஒழுங்குபடுத்தல், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தவும், சர்வதேச மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான மையமாக இலங்கையை மாற்றவும் தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

      Tags

      Post a Comment

      0 Comments