கனடாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு, முழுமையாக தடுப்பூசிகளை பெற்ற பயணிகள், இன்றுமுதல் கோவிட் 19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க தேவையில்லை.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்புக்களுக்கு அமைய, வான்வழி, தரைவழி மற்றும் நீர்வழி ஊடாக வருகை தரும் பயணிகள் அனைவருக்கும், இத்தளர்வுகள் அமுல்படுத்தப்படுகின்றன.
அதேவேளை, Arrive CAN செயலி ஊடாக கேள்விகளுக்கு பதிலளிப்பது, எழுந்தமான பரிசோதனைகள் ஆகியன தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதுடன், பொது பகுதிகளில், 14 நாட்களுக்கு, முக உறைகளை அணியவேண்டும். தடுப்பூசிகளை பெறாத கனடிய மக்களும் வெளிநாட்டு மக்களும், கனடாவுக்குள் நுழையும்போது, கோவிட் 19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
Post a Comment
0 Comments