Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னணி பாடகர்!

தமிழ் சினிமாவில் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளவர் கானா பாலா.
இவர் சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2006, 2011ல் நடைபெற்ற தேர்தல்களில் அதே பகுதியில் போட்டியிட்டு 2வதாக வந்துள்ளார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டி
கானா பாலா

திரைத்துறையில் கானா பாடல்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் காணப்படுகிறது. பல கானா பாடகர்கள் தமிழ் சினிமாவில் சிறப்பான பல பாடல்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கானா பாலா 300க்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் சினிமாவில் பாடியுள்ளார். தொடர்ந்து பாடி வருகிறார்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டி

3வது முறையாக போட்டி
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தை சேர்ந்த இவர் தற்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். திருவிக நகர் 65து மண்டலம் 72வது வார்டில் போட்டியிட இவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

 கானா பாலா
3வது முறையாக போட்டி

இவரது சகோதரர் கபிலன் பாஜகவில் உள்ளார். கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களிலும் அதே வார்டில் போட்டியிட்ட கானா பாலா, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அதே வார்டில் 3வது முறையாக தற்போது விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளார் கானா பாலா.

பிறந்த இடத்திற்கு நன்மை

பிறந்த இடத்திற்கு நன்மை

கடந்த 19 ஆண்டுகளாக கவுன்சிலராக வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வருவதாகவும் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு அந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யவே தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


கண்டிப்பாக வெற்றி

அந்தப் பகுதி மக்களுக்கு தான் நன்கு அறிமுகமானவன் என்பதால் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே அந்த பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார் கானா பாலா.

வெற்றி கிடைக்குமா?

வெற்றி கிடைக்குமா?

தமிழ் சினிமாவில் கானா பாலா பாடியுள்ள பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இவர் தேர்தலிலும் தற்போது போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள இவர், தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big