உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம்: அரச வர்த்தமானி வெளியீடு!

நாட்டில் உள்ள பிரதேசங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இதன் மூலம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.



அனுமதி இன்றி மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குகளுக்கு ஏற்ப சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பிலான வரையறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார்.


No description available.No description available.

Post a Comment

Previous Post Next Post