இங்கிலாந்தில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தில் உள்ள நிலையில் உலகின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பெட்ரோலுக்காக 7 மணிநேரம் காத்திருந்து திரும்பிச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போடுவதற்காக 2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள பென்ட்லி கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அந்த காருக்கு பின்னால் வந்த பாதுகாப்பு வாகனங்களும் பெட்ரோல் போடுவதற்காக வந்து நின்றுள்ளது.
எனினும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் இல்லை, எனவே பெட்ரோல் போட முடியாது என அங்கிருந்த ஊழியர்கள் கூறியுள்ளார்கள். அப்போது தான் அந்த கார் உலகின் பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கார் என்பது தெரியவந்தது.
எனினும் பெட்ரோல் இல்லை என ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) கார் 7 மணி நேரம் காத்திருந்தும் பெட்ரோல் போட முடியாமல் திரும்பிப் போயுள்ளது.
கோடி கோடியாகப் பணம் இருந்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் (Cristiano Ronaldo) பெட்ரோல் போட முடியாமல் 7 மணி நேரம் காத்திருந்து வெறுங்கையுடன் திரும்பிச் சென்ற சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.