வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், வழிப்பாட்டு தலங்களில் நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இனி அனைத்து நாட்களிலும் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை குறைந்திருந்தாலும் 3ஆவது அலை பரவலை தடுக்க கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் வாரத்தில் கடைசி 3 நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. பூஜைகள் மட்டும் பக்தர்களின்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.இதனால் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் சரஸ்வதி பூஜையையொட்டி கோயில்களை திறக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக அரசு முடிவு
இதில் கோயில்கள் திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் நாளை விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி கோயில்களில் நடத்தப்படுவது வழக்கம்.
கோயில்கள்
ஆனால் நாளை வெள்ளிக்கிழமை கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் இன்றைய தினமே மக்கள் கோயில்களில் குழந்தைகளுக்கு அரிசியில் ஏடு தொடங்கும் பயிற்சியை அளித்தனர். ஏற்கெனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது முடிவடைந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்றைய தினம் ஆலோசனை நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி
கடற்கரை
அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்லவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் சமையலர் காப்பாளர் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. இது போல் இறப்பு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம்.
Post a Comment
0 Comments