முழுமையாக தடுப்பூசி பெற்ற சர்வதேச பயணிகள் கனடாவிற்குள் நுழைய மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது .Covid-19 வைரஸ் தொற்று எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உலகின் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன.
கனடாவிற்குள் நுழைந்த பின்னர் தனிமைப்படுத்துதல் போன்ற தேவைகள் தளர்த்தப்பட்டன. ஹெல்த் கனடா அங்கீகரித்துள்ள covid-19 தடுப்பூசி மருந்துகளை முழுமையாகப் பெற்ற அத்தியாவசிய மற்ற சர்வதேச பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டன.
கனடாவிற்கு பயணிக்க விரும்பும் சர்வதேச பயணிகள், covid-19 தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்களை கடந்து இருக்க வேண்டும். மேலும் covid-19 பரிசோதனைகளில் 72 மணி நேரங்களுக்கு முன்பு எதிர்மறையான முடிவுகளை பெற்றிருக்க வேண்டும். பயணிகளின் தடுப்பூசி பற்றிய விவரங்களை ஒன்லைன்(Website) இணைய பக்கத்தில் அல்லது Arrive CAN செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சர்வதேச பயணிகளுக்கான அளவுகோல்களை விமான நிறுவனம் பூர்த்தி செய்வது குறித்து உறுதி செய்யப்படும் என்று வினட் கூறினார் .விமான நிறுவனங்களின் வரைமுறைகளை பயணிகள் பூர்த்தி செய்யாவிட்டால் விமானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அங்கீகரித்துள்ள Covid-19 தடுப்பூசி மருந்துகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மாடர்னா, அஸ்ட்ரா ஜனகா, பைசர் பயோடெக் மற்றும் கோவிஷீல்ட் போன்றவை கனடிய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜான்சன் & ஜான்சன் ஒற்றை டோஸ் விருப்பத்திற்கு ஏற்றது போல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் Covid-19 வழக்குகள் அதிகரித்தாலும் கனடா முழுவதும் Covid-19 தடுப்பூசி மருந்து விரைவாக விநியோகம் செய்யப்படுவதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் வழக்குகள் மற்றும் நோயின் தீவிரம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment
0 Comments