பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகள்; அவசர நிலை பிரகடனம் அறிவித்தது ஜப்பான்.
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. "டோக்கியோவில் அவசரகால நிலையை நாங்கள் அமல்படுத்துகிறோம்; ஆகஸ்ட் 22 வரை இந்த கோவிட் அவசரநிலை நீடிக்கும்" என்று ஜப்பானின் பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்தார்.
[Large banner promoting the Tokyo 2020 Olympics in Tokyo, Monday, March 23, 2020.] (AP Photo/Jae C. Hong) |
இது ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பின்னடைவு. போட்டிகள் ஏற்கனவே கொரோனா தொற்றுநோயால் தாமதமான நிலையில், மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறை என ஒலிம்ப்பிக் போட்டிகள் தொடர்ச்சியான பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் வருகை தொற்றுநோயின் புதிய அலையை ஏற்படுத்தலாம் என்ற பரவலான கவலைகளுக்கு மத்தியில், விளையாட்டுகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பல வாரங்களாக வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது ஜப்பான் அரசு டோக்கியோவில் அவசரநிலையை அறிவிக்கிறது.
ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி, ஏற்கனவே வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளது. தற்போது விளையாட்டு மைதானங்களில் அதிகபட்சம் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும், அதிகபட்சம் 10,000 பார்வையாளர்கள் என தெரிவித்துள்ளனர். பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடுகளை இறுதி செய்வதற்கான அறிவிப்பு நாளைக்குள் (09-07-2021) வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (International Olympic Committee (IOC)) தலைவர் தாமஸ் பாக் டோக்கியோவுக்கு இன்று வருகிறார். இன்று முதல் டோக்கியோவிற்கு ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பானவர்களின் வருகை அதிகரிக்கும். பங்கேற்பாளர்கள், அரசு அதிகாரிகள் பாராலிம்பிக் அதிகாரிகள் என பல தரப்பினரும் டோக்கியோவிற்கு வரத் தொடங்கிவிட்டனர்.
விளையாட்டுகளில் கலந்துகொள்பவர்கள் ஆரவாரம் செய்வது, பாடல்கள் பாடி வீரர்களுக்கு உற்சாகமூட்டுவதை விட தையோ அல்லது பாடுவதையோ விட கைதட்டல் மூலம் தங்கள் ஆதரவைக் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பொது பார்வை தளங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டோக்கியோவில் அவசரகால நிலை ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 22 வரை அமலுக்கு வருகிறது. இதை நாட்டின் கொரோனா வைரஸ் விவகாரங்களை கவனிக்கும் ஜப்பான் பொருளாதார அமைச்சர் யசுடோஷி நிஷிமுரா கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்கவிருக்கிறது. இந்த காலகட்டத்தில் டோக்கியோவில் வைரஸ் தொற்று பரவல்(Emergency) அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் இப்படியொரு அவசரநிலை அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கலாம். கொரோனா வைரஸின் பரவல் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கூட மாற்றிவிட்டது.
ஜப்பானில் பிற நாடுகளைப் போல கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இல்லை என்றாலும், இதுவரை 8,10,000 க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 14,900 ஆக உள்ளது.
Social Plugin
Social Plugin