சீனாவில் பாலம் கட்டப் போகிறோம் உங்கள் வீட்டை விட்டுக் கொடுங்கள் என கேட்க பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரின் வீட்டை சுற்றி பாலம் கட்டியுள்ளனர் சீன அதிகாரிகள்.
ஒரு பாலம் அல்லது பூங்கா மற்றும் மிகப்பெரிய சாலை அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று பகுதியில் இடம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால் சீனாவின் Guangzhou பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மேம்பால பணியை முடிக்க அதிகாரிகள் ஆயத்தமாகினர்.
கடைகள்
இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகளை அரசு எடுத்துக் கொண்டு உரியவர்களுக்க வேறு பகுதியில் வீடு கொடுத்துவிட்டனர். ஆனால் அப்பகுதியில் இருந்த லியாங் என்ற பெண்ணிடம் நீங்கள் இருக்கும் வீட்டை விட்டுக்கொடுங்கள் மாற்று இடம் தருகிறோம் என கட்டுமான அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
வீட்டை
40 சதுர மீட்டர் கொண்ட அந்த வீட்டை கொடுக்க லியாங் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். எப்படியும் பெண்ணிடம் இடத்தை வாங்கி விடலாம் என்ற தைரியத்தில் பாலத்தை கட்டி முடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கிவிட்டார்கள்.
இடம் தரவில்லை
வரிப்பணம் வீணடிக்கக் கூடாது
பின்னர் வரிப்பணம் வீணடிக்கக் கூடாது என கருதி பெண்ணின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு அதனைச் சுற்றி பாலம் கட்டினர் சீன அதிகாரிகள். தற்போது பாலத்தின் நடுவே உள்ள ஒற்றை வீட்டை பார்க்க அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
பாலம் திறப்பு விழா
இந்த வீட்டிற்கு நெயில் ஹவுஸ் என பெயரிட்டுள்ளார்கள். அண்மையில்தான் இந்த பாலம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த வீட்டை அந்த பெண் கொடுக்காததற்கு பூர்வீக இடம் காரணமா, இல்லை ஏதேனும் சென்டிமென்ட்டா என தெரியவில்லை.
Post a Comment
0 Comments