Type Here to Get Search Results !

#HappyNewYear2025

#HappyNewYear2025
#HappyNewYear2025 #HappyNewYear #2025

ssss

WeLComeToSOORIYAN
@Sooriyantv24

தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு 31.07.2021 காலை 6 மணி வரை தடை விதிக்கப்படுகிறது.


தடை மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்:

* புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு போக்குவரத்துக்கான தடை தொடரும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

* தியேட்டர்கள், அனைத்து மதுக்கூடங்கள் இயங்க தடை தொடர்கிறது

* நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.


திருமண நிகழ்வு

திருமண நிகழ்வு

* பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை

* பள்ளி, கல்லூரிகள் செய்லபட தடை தொடருகிறது

* உயிரியல் பூங்காக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

* நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

* இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தொழில் பயிற்சி நிறுவனங்கள்
தொழில் பயிற்சி நிறுவனங்கள்.

நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என்றும்திரையரங்குகளுக்கு தடை தொடரும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.                                                                                      தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

ஆசிரியர்கள் வர வேண்டும்

ஆசிரியர்கள் வர வேண்டும்

* மேலும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


வழிகாட்டு நெறிமுறைகள்

இவை தவிர அனைத்து கடைகள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அங்கு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big