அண்மையில் வெளிவந்த தகவலின்படி, தாழ்வழுத்த மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத்தொகைகள் செலுத்த ஜூன் மாதம் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்வாரியம் இதுகுறித்து தெரிவித்தது என்னவென்றால்,
சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிறுகுறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.அதுவும் கடந்த சில நாட்களாக 4 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கைகள் பதிவாகின. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன.
கொரோனா வைரஸ் உலக முழுவதும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்சமயம் இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.
கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது.
Post a Comment
0 Comments