மொபைல் பாதுகாப்பு நிறுவனமான ஜிம்பீரியத்தின் (Zimperium) ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உங்கள் தரவைத் திருடக்கூடிய புதிய Android malware வெளிவந்துள்ளது. இந்த malware மிகவும் புத்திசாலித்தனமாக ‘System Update’ என்று பெயரிடப்பட்டு, Android ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்டதும், உங்கள் ஆன்லைன் தேடலையும் பிற செயல்பாடுகளையும் கண்காணிக்க மட்டுமல்லாமல், உங்கள் தரவையும் திருட முடியும்.
பாதிப்பில்லாத, அதே சமயம் பயனர்களை ஊக்குவிக்கும் - System Update என்கிற பெயரின் கீழ் மாறுவேடமிட்டு வரும் இந்த ஸ்பைவேர் அப்டேட் என்கிற போர்வையின் கீழ் பெரும்பாலான பயனர்களை ஏமாற்றலாம், எனவே பயனரிகள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெக் க்ரஞ்சிற்கு அளித்த அறிக்கையில், “இது நாம் கண்டதிலேயே மிகவும் அதிநவீனமானது. இந்த ஆப்பை உருவாக்க நிறைய நேரமும் முயற்சியும் செலவிடப்பட்டதாக தெரிகிறது. இதுபோலே இன்னும் பிற ஆப்கள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம், கூடிய விரைவில் அவற்றைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.” என்று ஜிம்பேரியம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் மிட்டல் இவ்வாறு கூறினார்.
RAT malware: உங்கள் Android தொலைபேசியில் என்ன ஆபத்து உள்ளது
மால்வேரால் (Malware) எதிலெல்லாம் கை வைக்க முடியும்? என்கிற கேள்விக்கான பதில் சற்றே நீளமானது. Instant messenger மற்றும் database files உள்ள செய்திகள், தொலைபேசி மற்றும் அழைப்பு பதிவுகளில் உங்கள் தொடர்புகள், வாட்ஸ்அப் பதிவுகள், உங்கள் புகைப்படங்கள், வீடியோ, அடிப்படையில் உங்கள் Location-ஐ அறிய முடியும், உங்கள் போன் கேமரா மற்றும் மைக்ரோஃபோனை ஹைஜாக் செய்து புகைப்படங்களை எடுக்கலாம்,ஆடியோ பதிவு செய்யலாம், உங்கள் ப்ரவுஸர் ஹிஸ்டரியை கூட பார்க்கலாம். அடிப்படையில் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தையும் இதுபோன்ற மால்வேரால் களவாட முடியும் என்று கிஸ்மோடோ வலைதளத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
malware உங்கள் கணினியில் எவ்வாறு வர முடியும்
மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் (Google Playstore) மூலம் பயன்பாடு உங்கள் Android தொலைபேசியில் வரலாம். கணினி புதுப்பிப்பு தீம்பொருள் ‘சிஸ்டம் அப்டேட்’ மட்டுமின்றி, பல்வேறு வடிவங்களிலும் பெயர்களிலும் வருகிறது என்று கூறப்படுகிறது, இருப்பினும் அவை பெரும்பாலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை தொலைநிலையாக அணுகுவதன் மூலம் பயனர் தரவைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment
0 Comments