தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் 14,842 பேருக்கு கொரோனா (Coronavirus) உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,66,329 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 174 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. முதல் அலையில் காணாத பாதிப்புகளை இந்தியா தற்போது எதிர்கொண்டு வருகிறது. டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் பலர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) என்ற செய்திகள் வெளிவந்து வருகின்றன. இந்த வருசையில் தமிழகமும் இணைந்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்துக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்.,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், விரைவில் தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தேவை எட்டும் என்று தெரிகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. எனவே, 450 மெட்ரிக் டன்னை விட ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தேசிய மருத்துவ ஆக்ஸிஜன் பங்கீட்டில் தமிழகத்தில் 220 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. 220 மெட்ரிக் டன்தான் தேவை என்ற தவறான கணக்கீட்டின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்யவேண்டும். தமிழகத்தின் தற்போதைய தேவையே 310 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திரும்பிவிடப்படும் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
0 Comments