தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்.


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு இருந்ததைவிட, கொரோனா தொற்றின் இந்த வேறுபாட்டின் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. தொற்று பரவும் வேகமும் மிகவும் அதிகமாகவுள்ளது.

தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு நாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், மே மாதம் இந்த அளவுகள் உச்சத்தை எட்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். 

தற்போது தமிழக அரசு (Tamil Nadu Government) பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்:

-திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மால்கள், பார்கள் இயங்க அனுமதி இல்லை.

- அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

- பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.

- உணவகங்களில் உணவை எடுத்துச்செல்லவே அனுமதி.

- வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.

- பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு வைபவங்கள் நடத்தப்படும்.

- வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை.

- தனியாக இயங்கும் மளிகை காய்கறி கடைகளுக்கு ஏசி இல்லாமல் இயங்க அனுமதி.
- ஐ.டி நிறுவனங்களில் குறைந்தது 50% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

- வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயமாகும்.

- விளையாட்டு பயிற்சி சங்கங்கள் குழுமங்கள் இயங்க அனுமதி இல்லை

- திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேர் அனுமதி இல்லை.

- இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மேல் அனுமதி இல்லை.

-மாஸ்க் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்.

- பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து செல்ல மட்டும் அனுமதி, நின்று பயணிக்க அனுமதி இல்லை.

சில நாட்களுக்கு முன்னர், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்தது. இரவு ஊரடங்கு (Lockdown), ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு, குடும்ப நிகழ்ச்சியில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் என பலவித கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. 
எனினும், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும், தொற்றின் அளவில் சரிவைக் காண முடியவில்லை. நேற்று பிரதமருடனான ஆலோசனையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் கலந்துகொண்டு தேவையான விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் இன்று புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

#TNCoronaUpdate #TNLockdown #TNLockDown #Lockdowntamilnadu