Type Here to Get Search Results !

@LiveTamilTV

---------------------------------------------------------------------------------

SOORIYAN TV(#Tamil)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    --------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------

    தூத்துக்குடியில் கருப்பு தினம்: ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு!

    காற்றை நச்சாக மாற்றிய ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் இன்றைக்கு கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். இதை அடுத்து ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கருப்புக்கொடி கட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் BAN ஸ்டெர்லைட் என்று கோலமிட்டுள்ளனர்.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தி ஆலையால் நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக பல ஆண்டுகாலமாக புகார் எழுந்தது. ஆலையை மூட வேண்டும் மக்கள் பல ஆண்டுகாலமாக போராடினர்.

    கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஆலையை திறக்க உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

    ஆக்சிஜன் தேவை

    ஆக்சிஜன் தேவை

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜனை தயாரிக்க அனுமதிக்க வேண்டுமென்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    தமிழக அரசு மறுப்பு

    தமிழக அரசு மறுப்பு

    இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுத்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணமாக கூறி ஆலையை திறக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

    ஆலையை திறக்க எதிர்ப்பு

    ஆலையை திறக்க எதிர்ப்பு

    உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தினால் தூத்துக்குடி மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிப்பது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஸ்டெர்லைட் ஆலை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்த எதிர்ப்பை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.

    4 மாதங்கள் திறக்க அனுமதி

    4 மாதங்கள் திறக்க அனுமதி

    ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதை அடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக அதாவது நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பிரமாண பத்திரமாக உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது தமிழக அரசு.

    உத்தரவிட்ட நீதிபதிகள்

    உத்தரவிட்ட நீதிபதிகள்

    ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே 4 மாதங்கள் திறந்து செயல்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் உள்ளூர் நிர்வாகிகளும் இந்த குழுவில் இடம்பெறலாம் எனவும் நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.

    தூத்துக்குடியில் கருப்பு தினம்

    தூத்துக்குடியில் கருப்பு தினம்

    தமிழக அரசின் முடிவுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மக்கள் இன்றைக்கு கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். இதை அடுத்து ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கருப்புக்கொடி கட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் BAN ஸ்டெர்லைட் என்று கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஆலையை திறக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


    News Source: ThatsTamil

    Post a Comment

    0 Comments