Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ -------------------------------------------------------------------------------- ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
---------------------------------------------------------------------------------

கண்ணாடி கூண்டில் நறுமண செடிகளுடன் பசுஞ்சோலையால ஆன முகக் கவசம்: பெல்ஜியத்தில் முதியவர் அசத்தல்!

பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடி கூண்டினால் ஆன சிறிய பசுமை நிறைந்த செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

கொரோனா வந்தாலும் வந்தது அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா மற்றவர்களின் மூச்சுக்காற்று மற்றும் மூக்கு, வாயிலிருந்து வரும் நீர்த் துளிகளால் பரவுகிறது என்பது மாஸ்க் அணிய கூறுகிறார்கள்.

பறவை கூண்டினாலான மாஸ்க், சிக்கன் வாங்கின பில்லால் ஆன மாஸ்க், புடவை மாறாப்பால் போடப்படும் மாஸ்க், கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களால் செய்யப்படும் மாஸ்க் என அன்றாடம் கேலிக்கூத்தாகி வருவதை பார்க்கிறோம்.


சமூக ஆர்வலர்

ஆனால் பெல்ஜியத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அணிந்திருக்கும் மாஸ்க்கால் அனைவரும் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம். பெல்ஜியம் கலைஞர் ஆலியன் வெர்சூரன். இவர் சமூக ஆர்வலராவார்.



வீதிகள்

இவர் புருசல்ஸ் வீதிகளில் செல்லும் போது கண்ணாடி கூண்டினால் ஆன ஒரு மாஸ்க்கை அணிந்து செல்கிறார். அதில் நறுமணமிக்க செடிகள் உள்ளன. பார்க்க பச்சை பசேல் என இருப்பதால் இது பசுஞ்சோலை மாஸ்க் என கூறும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.



தூய்மையான காற்று

இது சிறிய பசுமை இல்ல உணர்வுகளை கொடுக்கிறது. பொதுவாக மாஸ்க் அணிந்தால் தூய்மையான காற்று என்பது கேள்விக்குறிதான். ஆனால் ஆலியன் அணிந்திருக்கும் மாஸ்க் கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதோடு தூய்மையான காற்றை கொடுக்கிறது.

நறுமண செடிகள்

நறுமண செடிகள்

 

 

அவரது மூச்சுக் காற்று அதில் உள்ள நறுமண செடிகளால் சுத்திகரிக்கப்பட்டு தூய்மையான காற்றாக கிடைக்கிறது. இவருக்கு 61 வயதாகிறது. இந்த ஐடியாவை 15 ஆண்டுகளுக்கு முன்னர் யோசித்துள்ளார். துனிசியாவில் இவர் பணியாற்றிய போது பசுமையான சோலைகளால் கவரப்பட்ட அவர் இப்போது இது போன்ற மாஸ்கை வடிவமைத்துள்ளார்.


ஆஸ்துமா

ஆஸ்துமா

இந்த கண்ணாடியிலாலான மாஸ்கை அணிவதால் கொரோனா பரவலில் இருந்து தடுப்பதோடு மற்றவர்களுடன் அவரின் தொடர்புகள் துண்டிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோயாளியான அவர் முகக்கவசம் அணிவதால் அசௌகரியம் ஏற்பட்டு இந்த கண்ணாடி மாஸ்க்கிற்கு மாறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big