Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

இலங்கையில் உதயமாகிய பாரதிய ஜனதா கட்சி - கட்சியின் தலைவர் முத்துச்சாமி பரபர பேட்டி!

பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டுள்ளமைக்கு பௌத்தமதகுரு கடும் கண்டனம்

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது என சிங்கள அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இலங்கை பாரதியஜனதா கட்சி என்ற அமைப்பு செய்தியாளர் மாநாட்டை நடத்தியுள்ளது பகியங்கல ஆனந்த சாகர தேரர் என்ற பௌத்த மதகுரு இலங்கையின் கட்சி அரசியலில் இந்தியா செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தால் பல பிரச்சினைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலும் இலங்கையிலும் பாரதிய ஜனதா என்ற கட்சி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும என தெரிவித்துள்ள பௌத்தமதகுரு அவ்வாறான செய்தியாளர் மாநாடுகளை தடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி உதயமாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் வி.முத்துசாமி யாழ்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை பாஜக செயலாளராக எம்.இந்திரஜித், பொருளாளராக வீ. திலான் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் மட்டுமின்றி, இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளிலும் பாஜகவின் ஆட்சி அமைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிடுவதாக திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் கடந்த பிப்ரவரி மாதம் கூறினார். இவரது கருத்து பெரும் சர்ச்சையானது. இலங்கை மற்றும் நேபாளத்தில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது இலங்கையிலும் பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இலங்கை

அப்போது அவர் கூறுகையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்குவதில் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.. இலங்கை பாரதிய ஜனதா கட்சி, ஆங்கிலத்தில் லங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும், சிங்களத்தில் லங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.

தமிழர் நலன்

தமிழர் நலன்

இலங்கையில் தமிழ் மக்களை முன்னிலைப்படுத்தி பல கட்சிகள் இருக்கின்றன. இருந்தாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிடுகின்றன. அதேநேரம் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தி அவை செயல்படுகின்றன. எனவே தான் தமிழ் மக்கள் மத்தியில், அந்தக் கட்சிகளால் நிலைத்து நிற்க முடிவதில்லை.

அனைத்து சமுதாயம்

அனைத்து சமுதாயம்

மற்ற கட்சிகள் போல நாங்கள் வாக்குறுதி வழங்க மாட்டோம். ஆனால் தமிழ் மக்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு, விளையாட்டு கலாச்சார மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளோம். இலங்கை பாரதிய ஜனதா கட்சி அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் உயர்த்தும் கட்சியாகச் செயல்படும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big