குழம்பு சமைப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மஞ்சள் இல்லாமல மக்களின் உணவில் சுவை இல்லை...
கிருமித்தொற்றுச் சூழலில், சுற்றுப்பயணிகள் மூலம் வரும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் அளவில் வருமானத்தை அதிகரிப்பதற்குக் கடந்த மார்ச்சில் சில இறக்குமதிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிப்பதும் அரசாங்கத்தின் நோக்கம்.
தடை செய்யப்பட்ட பொருள்களில் கார்கள், தரைக் கற்கள், இயந்திரப் பாகங்கள் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் மஞ்சள் மீதான தடைதான் மக்களின் கவலைக்குக் காரணமாகியுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கை பயன்படுத்தும் 7,500 டன் மஞ்சளில் 20 விழுக்காடு மட்டுமே உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதனால் ஏற்பட்ட பற்றாக்குறையால் அதன் விலை கிட்டத்தட்ட 20 மடங்காகியுள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சள் தற்போது 8000க்கு மேல் (48 டாலர்) விலையில் விற்கப்படுகிறது.
அண்மையில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 25 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.
Post a Comment
0 Comments