Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ -------------------------------------------------------------------------------- ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
---------------------------------------------------------------------------------

காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ள ஜனாதிபதி கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காணாமல் போனோரது உறவினர்களை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இதனை “இந்து” பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார்.

காணாமல் போனோரது உறவினர்கள் 5000 நாட்களைக் கடந்து தங்களது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு மற்றும் யுத்த காலத்தில் காணாமல் போன தங்களுடைய உறவினர்களுக்கு என்ன ஆனது? என்றும் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட காலப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அவர்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அவர்களை நேரடியாக சந்தித்து அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களுக்கு அப்பால் அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளை தெரிந்து கொள்ள ஜனாதிபதி விரும்புகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோரது உறவினர்களை ஜனாதிபதி சந்திக்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big