மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக 1.5 கோடி புதிய நாணயங்கள் அச்சடிப்பு!

மருத்துவர்களுக்கு கவுரவம்... எகிப்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வரும் மருத்துவக்குழுவினரை கவுரவிக்கும் விதமாக ஒன்றரை கோடி புதிய நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
எகிப்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் புதிதாக அச்சிடப்பட்டுள்ள நாணயங்களில் “எகிப்தின் மருத்துவக் குழுக்கள்” என பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு பணியாற்றும் 6 லட்ச மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post