ஒண்டாரியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்: ஒண்டாரியோ மாகாண அரசு அறிவிப்பு!

ஒண்டாரியோவில் மீண்டும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம்(14) தொடக்கம், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி பணிக்கப்படுகின்றனர். 

அவசரநிலை பிரகடனம் மூலம், மேலதிக வர்த்தக செயற்பாடுகளை மூடவும், ஒன்றுகூடல்களை தடுக்கவும் அரசுக்கு அதிகாரம் கிடைக்கிறது. 

இதனடிப்படையில், விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படுவதுடன், வெளிப்புறத்தில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், 10 இலிருந்து 5 ஆக குறைக்கப்படுகிறது. 

அத்தியாவசியம் அற்ற வர்த்தகங்கள், காலை 7 மணிமுதல், இரவு 8 மணிவரை மாத்திரமே திறக்கப்படும். அனைத்து அவசியமற்ற கட்டுமான பணிகளும் நிறுத்தப்படுகின்றன. 

டொரோண்டோ, பீல், யோர்க், ஹாமில்ட்டன், விண்ட்ஸர் ஆகிய பிராந்தியங்களில், பாடசாலைகளின் நேரடி வகுப்புக்கள், குறைந்தது வரும் மாதம் 10ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும்.

Post a Comment

Previous Post Next Post