உள்வரும் அனைத்து விமானப் பயணிகளும் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
கோவிட் தொற்றின் பரவலை கட்டுப்பதும் முயற்சியாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ புதிய பயண கட்டுப்பாடுகளை நேற்று(29) அறிவித்துள்ளார்.
இந்தத் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டுக்கு ஒவ்வொரு பயணிக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக டொலர்கள் செலவாகும் என பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறினார். எதிர்மறை சோதனை முடிவுகளைக் கொண்டவர்கள் வீட்டிலேயே இரண்டு வாரங்கள் கட்டாயமாக தனிமைப்படுத்த முடியும் எனவும் நேர்மறையான சோதனை முடிவுகளை கொண்டவர்கள் நியமிக்கப்பட்ட அரசாங்க விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பிரதமர் Trudeau தனது அறிவித்தலில் தெரிவித்தார்.
அதேவேளை கனடாவின் பிரதான விமான நிறுவனங்கள் Sun destinations எனப்படும் பிரபலமான விடுமுறை இடங்களுக்கான சேவையை நிறுத்தி வைக்கின்றன. இதற்கான இணக்கப்பாட்டை கனடிய மத்திய அரசும் கனடாவின் முக்கிய விமான நிறுவனங்களும் எட்டியுள்ளன.
Air Canada, WestJet, Sunwing, Air Transat ஆகிய விமான சேவைகள் அனைத்து Caribbean தீவுகளுக்கும் Mexicoவுக்குமான சேவையை ஞாயிற்றுக்கிழமை(31) முதல் ஏப்ரல்(April) 30ஆம் திகதி வரை நிறுத்தவுள்ளன. தற்போது பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுடன் விமானம் நிறுவனம் மீண்டும் கனடா திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இன்று அறிவித்தார்.
Post a Comment
0 Comments