கிளிநொச்சியில் உயர்தர மாணவன் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை!!

கிளிநொச்சி – பிரமந்தனாறு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்றைய(29) தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நேற்று பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மா.ணவன், அங்கிருந்த மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சகோதரிகள் இருவர் பாடசாலைக்கு சென்றுவிட, தாய் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

தந்தையும் கூலித் தொழிலுக்கு சென்றுவிட்ட நிலையில் குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இ வ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள மாணவன் உயர்தரம் வர்த்தக பிரிவில் கல்வி பயில்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post