தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே தமிழக மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என யாழ்பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கடந்தகாலங்களிலும் இனவெறியர்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமையானது அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இலக்குவைக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

