யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் நினைவுத் தூபி அமைப்பதற்கான அடிக்கல் இன்று காலை சுபவேளையில் நடப்பட்டது.
துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தலைமையில் மாணவர்களின் பங்கேற்புடன் இந்த அடிக்கல்ல நடும் நிகழ்வு இடம்பெற்றது.
தடுத்த பொலிஸார்
அதன் பிரகாரம் காலை 7 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று , பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய மாணவர்களின் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் போருடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களை தடை செய்யும் சுற்றறிக்கை விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ளது.
அதனையடுத்து அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அரசின் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.





No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.